Load Image
dinamalar telegram
Advertisement

ரூ.10 காயின் மூட்டை கொடுத்து கார் வாங்கிய இளைஞர்!

தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது குடும்பத்தினர் மளிகை கடையும், மழலையர் பள்ளியும் நடத்தி வருகின்றனர். கடைகள், வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பது வெற்றிவேல் மனதை பாதித்தது. மக்களும் 10 ரூபாய் நாணயத்தை புறக்கணித்ததால், விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தார். இதற்காக 10 ரூபாய் நாணயம் கொடுத்தே ஒரு கார் வாங்கி விடுவது என வினோத முடிவு எடுத்தார். சில வாரங்களாக வங்கிகள், கடைகளில் ரூபாய் நோட்டு கொடுத்து 10 ரூபாய் நாணயங்களை சேகரித்தார். 6 லட்சம் ரூபாய் சேர்ந்தது. கார் வாங்க சேலம் சென்றார். முதலில் பத்து ரூபாய் நாணயத்திற்கு கார் தர மறுத்த ஷோரூம் அதிகாரிகள், வெற்றிவேல் சொன்ன காரணத்தை கேட்ட பிறகு ஒப்புக் கொண்டனர். மூட்டைகளில் வெற்றிவேல் கொண்டு வந்த நாணயங்களை வாங்கிக்கொண்டு காரை வழங்கினார்.
Telegram Banner

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Selvaraj
Selvaraj - . 20-ஜூன்-2022 13:07 IST

0..............

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement