Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் ஆய்வு செய்யுங்கள் மத்திய அரசிடம் வானதி கடிதம்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ, வானதி சீனிவாசன், டில்லியில் மத்திய வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்தார். கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக கடிதம் அளித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஸ்மார்ட் திட்ட பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சட்டசபையில் பலமுறை வலியுறுத்தினேன். பயனில்லை. எனவே, தமிழகத்தில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, கோவையில் நடக்கும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என கடிதத்தில் வானதி குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement