Load Image
dinamalar telegram
Advertisement

மோசடி செய்த கட்சி தலைவரை கடத்தி தர்ம அடி 4 பேர் கைது !

சென்னை புளியந்தோப்பு, கேபி பார்க் பகுதியை சேர்ந்தவர் 42 வயது சாலமன். அகில இந்திய ஜனநாயக கட்சி தலைவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். சாலமன், நண்பர் விஜயகுமாருடன் கோயம்பேட்டில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, ஐந்து பேர் அவரை கடத்தி சென்றனர். விஜயகுமார் போலீசில் புகார் அளித்தார். சாலமனின் செல்போன் சிக்னலை டிராக் செய்து, மதுரவாயல் அபிராமி நகருக்கு போலீசார் சென்றனர். அங்கு, காயங்களுடன் இருந்த சாலமனை மீட்டனர். கடத்தி சென்ற அண்ணாநகர் கண்ணன் அவரது நண்பர்கள் சுரேஷ், சரவணன், மூர்த்தி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பண மோசடி செய்ததால், சாலமனை கடத்தியது விசாரணையில் தெரிந்தது. கைதானவர்களில் கண்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். ஒரு இடத்தை முடித்து கொடுக்க, சாலமனிடம் 55 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். சாலமன் பணத்துடன் எஸ்கேப் ஆனார். நீண்ட நாட்களாக தேடி வந்த கண்ணன், கோயம்பேட்டில் அவரை பார்த்ததும் நண்பர்களை வரவழைத்து தூக்கியுள்ளார். பணத்தை கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். சாலமன் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். கடத்திய நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement