Load Image
dinamalar telegram
Advertisement

அதிக வருவாய் ஈட்டிய கட்சி திமுகவுக்கு முதலிடம்!

இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளின் வருவாய், செலவினங்கள் பற்றிய அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டது. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் வருவாய் மற்றும் செலவினம் குறித்த கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கையை இந்த அமைப்பு தயாரித்தது. 2020_2021ம் நிதியாண்டில் 31 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.529.41 கோடி. இதில் திமுக ரூ.149.95 கோடி வருவாயுடன் முதலிடத்தில் உள்ளது. ரூ.108 கோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டாமிடத்திலும், ரூ.73.34 கோடியுடன் பிஜு ஜனதா தளம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதிகம் செலவு செய்த கட்சிகளின் பட்டியலிலும் திமுகவே முதலிடம் பிடித்துள்ளது. திமுக 218 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ரூ.54.7 கோடியும், அதிமுக ரூ.42 கோடியும் செலவு செய்துள்ளன. நாட்டில் மொத்தமுள்ள 54 மாநில கட்சிகளில் 23 கட்சிகளின் அறிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement