Load Image
dinamalar telegram
Advertisement

கன்டெய்னர் லாரியில் தீ, ரூ.1 கோடி பொருட்கள் நாசம்

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது.  இங்கிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான டிவி, ப்ரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் கன்டெய்னர் லாரியில் டெல்லி புறப்பட்டது. மணவாளநகர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் சென்றபோது கன்டெய்னரில் இருந்து புகைமூட்டம் கிளம்பியது. லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு போலீசுக்கும், நிறுவனத்துக்கும் தகவல் அளித்தார். சிறிது நேரத்தில் கன்டெய்னர் முழுவதும் தீ பரவியது. தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். லாரியில் இருந்த மொத்த  பொருட்களும் தீயில் கருகின. தீ பிடித்ததற்கான காரணம் குறித்து மணவாளநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LorryFire #Accident #Thiruvallur
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement