Load Image
dinamalar telegram
Advertisement

ஆபீஸர்களிடமே கலெக்ஷன் | டுபாக்கூர்களால் 'ஷாக்' ஆன ஒரிஜினல் கலெக்டர்

அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி பெயரில், அம்மாவட்ட அரசு ஊழியர்களுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ்கள் வந்தன. "நான் கலெக்டர் ரமண சரஸ்வதி. எனக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அனுப்பி வையுங்கள்" என கூறப்பட்டிருந்தது. வாட்ஸ்அப் முகப்பு படத்தில் கலெக்டர் போட்டோ இருந்தது. "கலெக்டரே இப்படி பரிசு கேட்கிறாரே.." என பல ஊழியர்கள் 'ஷாக்' ஆகினர். சந்தேகம் அடைந்த சில ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் விவரத்தை கூறினர். 2 செல்போன் எண்ணில் இருந்து இப்படி மெசேஜ்கள் வந்தன. இரண்டிலும் கலெக்டர் போட்டோ தான் முகப்பு படமாக இருந்தது. அவை கலெக்டரின் நம்பர் இல்லை. கலெக்டர் போர்வையில் பணம் பறிக்க மோசடி கும்பல்தான் மெசேஜ்களை அனுப்புகிறது என்பது அதிகாரிகளுக்கு புரிந்தது. விஷயத்தைக் கேட்டு ரமண சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். அரசு கொடுத்த செல்போன் எண்ணைத்தான் கலெக்டர் பயன்படுத்துகிறார். கலெக்டர் பெயரில் பரிசு கேட்டு மெசேஜ் வந்தால், போலீசுக்கு தகவல் கொடுங்கள் என அரசு ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது மோசடி கும்பல் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து போலீஸ் விசாரிக்கிறது. அரசு ஊழியர்களின் போன் நம்பர்கள் எப்படி மோசடி கும்பலுக்கு தெரிந்தது என்பது புரியாத புதிராக உள்ளது. டுபாக்கூர் கலெக்டர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்கிறது போலீஸ்!
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement