Load Image
dinamalar telegram
Advertisement

ஜாதி சான்று இல்லாததால் தேர்வு எழுத மாணவிக்கு அனுமதி மறுப்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த செல்லகுட்டபட்டியை சேர்ந்த தமிழ்விழி பத்தாம் வகுப்பு படிக்கிறார். ஜாதிச்சான்றிதழ் இல்லாததால், மாணவியை பொதுத்தேர்வு எழுத அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகம் வந்த மாணவியின் குடும்பத்தினர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 10 ஆண்டுகளாக ஜாதிச்சான்றிதழ் கேட்டு போராடி வருவதாக மாணவி குடும்பத்தினர் தெரிவித்தனர். என்ன காரணத்திற்காக ஜாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். #Krishnagiri #School #Exam #dinamalar
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement