Load Image
dinamalar telegram
Advertisement

முற்பட்டோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அவசியம்

திருச்சியில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில இளைஞரணி கருத்தரங்கு நடைபெற்றது. மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன், தினமலர் (திருச்சி பதிப்பு) நாளிதழில் வெளியான இளைஞரணி கருத்தரங்கு மலரை வெளியிட்டார். பொதுச் செயலாளர் கணேசன், பொருளாளர் சங்கர ராமநாதன் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். கருத்தரங்கை கர்நாடக இசை கலைஞர் சந்தானகோபாலன், மங்களம் திருமண மகால் உரிமையாளர் ஆனந்த் துவக்கி வைத்தனர். ஐடி துறையில் இளைஞர்கள் என்ற தலைப்பில் பிரகாஷ் செம்பை, பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் பேசினர். தற்கால சூழ்நிலையில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் சியுபி பவுண்டேஷன் சேர்மன் பாலசுப்பிரமணியம், இளைஞர்களுக்கு வங்கிகளில் உதவிக்கரம் என்ற தலைப்பில் எஸ்.பி.ஐ. மண்டல மேலாளர் ஹரிஹரன், நீங்களும் தொழில் அதிபராகலாம் என்ற தலைப்பில் கோவை தொழிலதிபர் ஜெகன், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கோயில் பாலு பேசினர். கருத்தரங்கில் ஸ்ரீ நாராயணி பைனான்ஸ் மேனேஜிங் டைரக்டர் கார்த்திகேயன், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் கோயில் ஐயப்பன், ரோட்டரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement