Load Image
dinamalar telegram
Advertisement

போக்குவரத்து அதிகாரி காரில் கட்டு கட்டாக சிக்கிய பணம்!

கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையர் உமாசக்தி. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன. ஆம்னி பஸ் அதிபர்கள், ட்ரைவிங் ஸ்கூல் உரிமையாளர்களிடம் மாதாந்திர வசூலில் ஈடுபடுவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் வந்தது. கோவை சவுரிபாளையம் கிருஷ்ணா வீதி வழியாக காரில் வந்த உமாசக்தியை போலீசார் மடக்கினர். காரை சோதித்தபோது 500, 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தன. மொத்தம் 28 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர். அனைத்தும் லஞ்சமாக பெற்ற பணம் என கூறப்படுகிறது. உமாசக்தியுடன் செல்வராஜ் என்பவரும் இருந்தார். இவர் ஓய்வு பெற்ற உதவியாளர். பண வசூலுக்கு செல்வராஜ் உதவியுள்ளார். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement