Load Image
dinamalar telegram
Advertisement

வேலூர் சிஎம்சிக்கு 46வது இடம்

உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை சியோ வேர்ல்ட் (CEOWORLD) இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதில் 3 கல்லூரிகள் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்தவை. 21-வது இடத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும், 37-வது இடத்தில் புனேயில் உள்ள இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரியும் உள்ளன. 46-வது இடத்தில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரியும், 55-வது இடத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும், 60-வது இடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியும் உள்ளன. அமெரிக்காவின் ஹார்டுவேர் மருத்துவக் கல்லூரி முதல் இடத்தையும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement