Load Image
dinamalar telegram
Advertisement

நெடுஞ்சாலை அதிகாரிகள் சஸ்பெண்ட்

கரூர் மாவட்டம் வால்காட்டு புதூர், காக்காவாடி பிரிவு, நன்னியூர் புதூர், மண்மங்களம் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் நல்ல நிலையில் உள்ளன. புதிதாக போட்டதாக 3.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிகாரிகள் மீது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதாரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தெரிந்த தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் அவசர, அவசரமாக அப்பகுதிகளில் சாலைகளை தோண்டி பணி நடப்பது போல் காட்டிக்கொண்டனர். இது பற்றியும் கலெக்டரிடம் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை இல்லை. அதிமுக சார்பில் முதல்வரின் தனிப்பிரிவு, தலைமை செயலாளரிடம் புகார் அளித்தனர். நெடுஞ்சாலை துறை குழுவினர் சாலைகளில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், கரூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபால் சிங், கோட்ட கணக்கர் பெரியசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனர் தீரஜ்குமார் உத்தரவிட்டார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement