Load Image
Advertisement

ரயில் நிலையங்களில் கஞ்சா சப்ளை 13 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கும்பலாக நின்று இருந்த திமோதி , பிரித்திவி , ஸ்ரீராம் , ரோஹனிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து குட்கா பொட்டலங்கள், போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். திரிபுராவில் இருந்து நண்பர்கள் வாங்கி கொடுத்தது தெரிந்தது. பள்ளி , கல்லூரி மாணவர்கள் , பயணிகளுக்கு ரகசியமாக அவற்றை விற்று வந்துள்ளனர். திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்று வந்த ஹரீஷ், லோகேஷ், நரேஷ் ; ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே போதை மாத்திரை விற்று வந்த சச்சின் , சரவணன் , வாசு , ரகுமான் , யூசுப் , கெளவுஸ்ருதின் ஆகியோரை கைது செய்தனர். மொத்தம் 20 லட்சம் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 2 கார், 2 பைக்குகளை கைப்பற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement