Load Image
dinamalar telegram
Advertisement

சமூக ஆர்வலர் நிடா கானுக்கு கொலை மிரட்டல் கணவர் மீது வழக்கு

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியை சேர்ந்தவர் நிடா கான். இவரை 2015ல் முத்தலாக் சொல்லி கணவர் ஷீராஸ் கான் Sheeraz Kha விவாகரத்து செய்தார். முத்தலாக் சொல்வது குற்றம் என சட்டம் வந்த பிறகு, நிடா பாஜவில் சேர்ந்தார். தொண்டு நிறுவனத்தை தொடங்கி, முத்தலாக்குக்கு எதிராகவும், பலதார மணத்துக்கு எதிராகவும் தீவிர பிரசாரம் செய்து வந்தார். இதனால் இஸ்லாம் மதத்தில் இருந்து நிடா விலக்கி வைக்கப்பட்டார். நிடாவின் தலைமுடியை துண்டித்து வந்தால் சன்மானம் வழங்கப்படும் என ஃபத்வா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பரேலியில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்க சென்ற நிடா கானை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சூழ்ந்து தகராறு செய்தனர். பாஜவில் இருந்து விலகாவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டினர். இதுபற்றி போலீசில் நிடா கான் புகார் அளித்தார். கணவர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement