Load Image
dinamalar telegram
Advertisement

திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுகவினர் அதிரடி நீக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட பல அதிமுக நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை வெளியிட்டனர். திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேட்புமனுக்களை வாபஸ் பெறுதல், அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுதல் போன்ற காரணங்களுக்காக நிர்வாகிகள் நீக்கப்படுவதாக அறிக்கையில் கூறியுள்ளனர். நீக்கப்பட்ட நிர்வாகிகள், கோவை புறநகர், கோவை மாநகர், திருச்சி மாநகர், மதுரை மாநகர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை புறநகர், தென்சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு புறநகர், திருப்பூர் புறநகர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். நீக்கப்பட்ட நிர்வாகிகளுடன் அதிமுகவினர் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் ஓ.பி.எஸ், இபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement