Load Image
dinamalar telegram
Advertisement

காரோ, நிலமோ யோகியிடம் இல்லை

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் நகர் தொகுதியில் போட்டியிட, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 5 முறை கோரக்பூரில் இருந்து எம்பியான யோகி, முதன்முறையாக சட்டசபைக்கு போட்டியிடுகிறார். 6 வங்கிகளில் டெபாசிட், கையிருப்பு உட்பட 1.54 கோடி ரூபாய் தனது சொத்து மதிப்பு என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன், ஒரு லட்சம் ரூபாய் கைத்துப்பாக்கி, 80 ஆயிரம் ரூபாய் ரைபில் வைத்துள்ளதாகவும் யோகி கூறியுள்ளார். 2018ம் நிதியாண்டில் 14.38 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். 2019ல் 18.27 லட்சம், 2020ல் 15.68 லட்சம், 2021ல் 13.20 லட்சம் ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது. யோகி பெயரில் விவசாய நிலமோ, வேறு நிலமோ இல்லை. ஒரு கார் கூட அவர் பெயரில் கிடையாது. தன் மீது எந்த கிரிமினல் வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் யோகி வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement