dinamalar telegram
Advertisement

புடிங்க சார்... உங்க அதிகாரமே வேணாம்

பள்ளி கல்வி துறையில் மாநில அளவில் இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் என, உயர் பதவிகள் உள்ளன. இவர்கள் சென்னையில் இருந்து, மாவட்ட நிர்வாக பணிகளையும் மேற்கொள்வர். இதை எளிதாக்கும் வகையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் 2018ல் வழங்கப்பட்டன. அதன்படி, பள்ளிகளுக்கான அங்கீகாரம், ஆசிரியர்களுக்கான இடமாறுதல், நிதி உதவிக்கு அனுமதி உள்ளிட்ட அதிகாரங்கள், பள்ளி கல்வி இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. திமுக ஆட்சியில் பள்ளி கல்வி கமிஷனர் துவங்கி, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என அனைவரும், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம், நிர்வாக பணிகளை சுமத்தி ஸ்தம்பிக்க வைப்பதாக புகார் குவிந்துள்ளது. அதிகாரங்களை மட்டும் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, அதற்கான உள்கட்டமைப்பு, நிர்வாக செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தேவையான பணியாட்களை வழங்காமல், வேலைப்பளுவை மட்டும் சுமத்தினால் எப்படி என, சில அதிகாரிகள் குமுறுகின்றனர். வேண்டுமென்றால் எல்லா அதிகாரத்தையும் மறுபடியும் தலைமை அலுவலகத்துக்கே தர தயாராக இருக்கோம்... உங்க அதிகாரமே வேணாம்... ஆளை விடுங்க சார் என கொந்தளிக்கின்றனராம்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement