dinamalar telegram
Advertisement

டோங்கா எரிமலை வெடிப்பு பேரழிவின் அறிகுறி

பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவில் Tonga சில நாட்களுக்கு முன் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்தது. சுனாமி உண்டாகி ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. எரிமலை வெடிப்பால் பூமியில் ஏற்பட்ட அதிர்வு சென்னையிலும் உணரப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் இப்படி ஒரு எரிமலை வெடிப்பு நடந்ததில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 1991ல் பிலிப்பைன்ஸ் நாட்டில் பினாதுபோ Pinatupo எரிமலை வெடிப்பால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். டோங்கா எரிமலை வெடிப்பும் இதே மாதிரி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். டோங்கா எரிமலை 10 நிமிடம் தொடர்ச்சியாக வெடித்தது; எரிமலை வெடிப்பால் கிளம்பிய சாம்பலுடன் கூடிய புகை மூட்டம் 10 நிமிடங்களுக்குள் மொத்த நாட்டையும் சூழ்ந்தது. தரையில் இருந்து 39 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் மண்டலம் பரவியது. அதாவது 1.28 லட்சம் அடி உயரம். சமீப காலத்தில் இப்படியொரு எரிமலை வெடிப்பை பார்த்ததில்லை. இது பேரழிவின் அறிகுறி எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement