dinamalar telegram
Advertisement

இரண்டே நாளில் ரூ.358 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக்கில் முண்டியடிப்பு

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு கடந்த 2 நாளில் மட்டும் 358 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. 12 ம் தேதி 155 கோடி ரூபாய்க்கும், 13ம்தேதி 200 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. 15 ம் தேதி திருவள்ளுவர் தினம், 16 ம் தேதி முழு ஊரடங்கு, 18 ம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 3 நாள் மதுக்கடைகள் மூடப்படும், என அரசு அறிவித்துள்ளது. இதனால் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் முண்டியடித்து மதுபாட்டல்களை வாங்கினர். மாஸ்க் போட்டுவந்தால்தான் சரக்கு, 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. எல்லா விதிகளும் காற்றில் பறந்தன. இடையில் 17 ம்தேதி ஒருநாள் மதுக்கடைகள் திறந்திருக்கும். அன்றும் விற்பனை கடுமையாக இருக்கும் என்பதால் இந்தாண்டு பொங்கலுக்கு மது விற்பனை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
lana
lana - . 15-ஜன-2022 10:51 IST

இப்பொழுது எல்லாம் கரோணா பரவாது. கோவில் திறந்தால் மட்டும் பரவிடும்

Reply
parmanandlal parmanandlal
parmanandlal parmanandlal - . 15-ஜன-2022 10:20 IST

ஸ்டாலின் எதிரிகட்சி தலைவராக இருந்த போது நடத்திய டாஸ்மாக் கிற்கு எதிரான போர் என்னவாயிற்று? கனிமொழி வாக்குறுதிய திமுகவினரின் சாராய ஆலைகள் மூடல் என்னாச்சு? கோவன் என்பவனுக்கு பணம் கொடுத்து சாராயத்தை, மதுவை, டாஸ்மாக் ஐ ஒழிக்க நடத்திய நாட்டியம் என்னாச்சு? மொத்தத்தில் சாராயக் கடை திறந்த கருணாநிதியின் வாரிசுதான் என்பது ஸ்டாலினின் தற்போதைய நிலையில் உறுதியாகிறது.

Reply
Ram Pollachi
Ram Pollachi - . 15-ஜன-2022 08:00 IST

அநியாயமாக வாங்கும் கூலி காசுகள் அரசு கஜானாவில் உறங்குகிறது.

Reply
Atr Rajan
Atr Rajan - . 15-ஜன-2022 06:31 IST

0 ...

Reply
Sathish
Sathish - Coimbatore ,இந்தியா . 15-ஜன-2022 01:14 IST

இந்த குடிகார ஜந்துக்களின் வீட்டில் உள்ளவர்கள் இவர்களை ஏன் இப்படி விட்டுவைத்துள்ளனர்? குடிச்சு சாவட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என்ன? சொன்னா கேட்கமாட்டார்கள்.. குடும்பத்தோட எல்லாரும் குடிக்க போகலாம் என்று சொல்லி குழந்தை குட்டியுடன் எல்லோரும் கூடவே குடிக்க போங்க. ஒண்னா குடியை நிறுத்தணும் இல்லன்னா குடும்பத்தோட எல்லோரும் குடிங்க. இப்படி விட்டுவைப்பது கேவலமாக இல்லையா உங்களுக்கு?

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement