Load Image
dinamalar telegram
Advertisement

அடங்காத காளைகளுக்கும் பரிசு

மதுரை, அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு நடந்தது. மாலை வரை 568 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 300 வீரர்கள் வீரத்துடன் காளைகளை அடக்க முற்பட்டனர். 24 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி முதல் பரிசு காரை வென்றார். 19 காளைகளை அடக்கிய மதுரை வலையங்குளம் முருகனுக்கு 2 ம் பரிசாக பைக், 12 காளைகளை அடக்கிய மதுரை விளாங்குடி பரத்குமாருக்கு 3 ம் பரிசாக பசுவுடன் கன்று வழங்கப்பட்டது. யாராலும் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்கள் மணப்பாறை தேவசகாயம் மதுரை அவனியாபுரம் ராமு ஆகியோருக்கு முதல் இரு பரிசுகள் வழங்கப்பட்டன, அவனியாபுரம் கருப்பசாமி கோயில் காளைக்கு 3 ம் பரிசு கிடைத்தது.. பரிசுகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement