dinamalar telegram
Advertisement

விடாது போலிருக்கே மழை

நவம்பரில் பெய்த மழையில், பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அரசிடம் இருந்து மழை நிவாரணம் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கான அறிவிப்பு வராததால் ஏமாற்றம் அடைந்தனர். எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடந்தன.பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும் என மக்கள் மட்டுமின்றி, அதிகாரிகளும் எதிர்பார்த்தனர். இருந்தும், ரொக்கம் பற்றிய அறிவிப்பு வரவில்லை. மழை நிவாரணம் வழங்காத நிலையில், பொங்கல் பரிசிலாவது குடும்பத்திற்கு 1,000 ரூபாயாவது வழங்கினால் தான், மக்களின் கோபத்தை தணிக்க முடியும் என்று அரசுக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. மழை முடிந்து விட்டது. நிவாரண தொகை கேட்டதை மக்கள் மறந்து விடுவர் என பதில் வந்துள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் டிசம்பர் 30ல் பெய்த பல மணி நேர கன மழையால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மக்கள் நிவாரண தொகை கேட்பதை மறந்தாலும், மழை அதை வாங்கி தராமல் போகாது போல் தெரிகிறதே என கூட்டுறவு துறை அதிகாரிகள் புலம்புகின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement