Load Image
dinamalar telegram
Advertisement

தலைமை நீதிபதி ரமணா குற்றச்சாட்டு

ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தான் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான முதல் தடுப்பூசி. இந்தியாவில் ஜனவரியிலேயே கோவாக்சின் போடப்பட்டாலும்கூட, அதற்கு நவம்பர் 3ம்தேதி தான் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் வழங்கியது. இதுபற்றி ஐதராபாத்தில் நடந்த விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்வி.ரமணா குறிப்பிட்டு பேசினார். கோவாக்சின் தடுப்பூசி செயல்திறன் மிக்கது; புதிய வகை வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. ஆனால் இந்தியாவில் தயாரான தடுப்பூசி என்பதால் அது பலரது விமர்சனத்துக்கு ஆளானது; ஃபைசர் போன்ற சில பன்னாட்டு நிறுவனங்களும், நம் நாட்டிலேயே வசிக்கும் சில இந்தியர்களும் கோவாக்சின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயன்றனர். உலக சுகாதார நிறுவனத்திடம்கூட தடுப்பூசி மீது புகார் கூறினர். ஒப்புதல் கிடைப்பதை தடுக்க முயன்றனர் என தலைமைநீதிபதி வருத்தத்துடன் கூறினார். ஐ தராபாத்தில் உருவாக்கப்பட்டு, நாட்டுக்கு பெருமை சேர்த்த கோவாக்சின் தடுப்பூசியின் பெருமையை தெலுங்கு பேசும் மக்கள் உலகுக்கு சொல்ல வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement