dinamalar telegram
Advertisement

வீட்டுக்குள் ரூ 150 கோடி பதுக்கி வைத்த தொழில் அதிபர்! | Kanpur IT Raids | Rs 150 Crore | UP businessman's home

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் பியூஸ் ஜெயின். இவருக்கு சொந்தமான கான்பூர் வீடு, அலுவலகம், தொழிற்சாலை, குளிர்பான கிடங்கு, பெட்ரோல் நிலையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பான்மசாலா பொருட்களை உரிய பில் இல்லாமல் போலியான இன்வாய்ஸ்கள் தயாரித்து, வருமானத்திற்கு அதிகமான பணம் சேர்த்ததும், மும்பையில் இருந்து வாசனை திரவியங்களை ஏற்றுமதி செய்வதில் முறைகேடு நடந்துள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்திலும் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜிஎஸ்டி முறைகேடுகளும் நடந்துள்ளாதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல மணி நேரமாக நீடித்த சோதனையில் ஒரே வீட்டில் இருந்து 150 கோடி ரூபாய் புது கரன்சி நோட்டுகள் கைப்பற்றபட்டது. பியூஸ் ஜெயினுக்கு சொந்தமான அனந்தபுரி இல்லத்தில் 4 பணம் எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ணி வருகின்றனர். கட்டு கட்டாக பீரோக்களில் புது கரன்சிகள் இருப்பதால் பணம் எண்ணும் பணி தொடர்ந்து நடக்கிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement