Load Image
dinamalar telegram
Advertisement

'ஸ்பின் கிங்' ஹர்பஜன் சிங் ஓய்வு | Harbhajan Singh announces Retirement | Dinamalar Exclusive

கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், 1980ல் பிறந்த இவரை, 'பஜ்ஜி', 'தி டர்பனேட்டர்' என செல்லமாக அழைப்பர். 1998ல் பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 103 டெஸ்டில் 417 விக்கெட் சாய்த்துள்ளார். 236 ஒருநாள் போட்டியில், 269 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 28 'டி-20' போட்டிகளில் 25 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவின் சைமண்ட்சை குரங்கு என திட்டியது, ஐ.பி.எல்., தொடரில் ஸ்ரீசாந்த் கண்ணத்தில் அறைந்தது போன்ற சர்ச்சைகளில் சிக்கினார். கடந்த 2007ல் 'டி-20', 2011ல் 50 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற பெருமைமிக்கவர். இவருக்கு 2009ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஐ.பி.எல்., அரங்கில் மும்பை, கோல்கட்டா, சென்னை அணிகளுக்காக விளையாடினார். 2015ல் நடிகை கீதா பாஸ்ராவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் ஹர்பஜன், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது 41 வயதான இவர் கூறுகையில்,''வாழ்க்கையில் எனக்கு அனைத்தையும் வழங்கிய கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறேன். 23 ஆண்டு நீண்ட பயணத்தை அழகானதாக மாற்ற உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி,''என்றார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement