Load Image
dinamalar telegram
Advertisement

எதிரே வந்த பஸ்சில் மோதினார்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தவர் கார்த்திகேயன் வயது 42. இவரது மனைவி ப்ரீத்தியும் டாக்டர்தான். இரு குழந்தைகள் உள்ளனர். ஞாயிறு விடுமுறைக்காக சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு சென்றார். இன்று காலை காரில் மதுரைக்கு கிளம்பினார். மதுரை மாவட்டம் கப்பலூர் சுற்றுச் சாலையில் பரம்புப்பட்டி அருகே சென்றபோது அரசு பஸ், காரின் பக்கவாட்டில் உரசி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் கார்த்திகேயன் பஸ்சை காரில் விரட்டினார். பரம்புப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே பஸ்சை முந்திச் சென்று மடக்க நினைத்து வேகத்தை கூட்டினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையின் தடுப்பை தாண்டிச் சென்று, எதிரே வந்த பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். டாக்டர் காரை உரசிச்சென்ற பஸ் எது? என விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement