dinamalar telegram
Advertisement

மீனவர்களை விடுவிக்க முதல்வர் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் பேசினார். ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளை விடுக்க இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் உறுதி அளித்துள்ளார். முன்னதாக, கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மண்டபத்தை சேர்ந்த 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement