Load Image
dinamalar telegram
Advertisement

சுவர் இடிந்து 3 மாணவர் பலி தாளாளர் உட்பட 3 பேர் கைது! | School Students Death | Wall collapse | Dinamalar News

நெல்லையில் சாஃப்டர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. இதில், 9ம் வகுப்பு அன்பழகன், 8ம் வகுப்பு விஸ்வ ரஞ்சன், 6ம் வகுப்பு சுதீஷ் ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர். சஞ்சய், இசக்கி, பிரகாஷ், சேக் அபுபக்கர், அப்துல்லா ஆகியோர் படுகாயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதை கண்டித்து ஒட்டுமொத்த பள்ளி மாணவர்களும் பள்ளிக்கு முன்பு சாலை மறியல் செய்தனர். போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர். எனினும், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இறந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் சாலமன் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வி, மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement