Load Image
dinamalar telegram
Advertisement

காசு பார்ப்பதில் அரசியல்வாதிகளை மிஞ்சும் அதிகாரிகள்

அரசின் 'டாஸ்மாக்' நிறுவனம், உயர் வருவாயினர் பயன் பெறும் வகையில், 'எலைட்' மதுக் கடைகளை, வாடகை கட்டடங்களில் அமைத்து வருகிறது. இதற்காக வாடகை நிர்ணயம் செய்யும் பொறுப்பு, அதிகாரிகளிடம் விடப்பட்டுள்ளது. அதிகாரிகள் இடைத்தரகர்கள் உதவியுடன் இடத்தின் உரிமையாளர்களிடம் குறைந்த வாடகையில் ஒப்பந்தம் போடுகின்றனர். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரசிடம் மேல்வாடகைக்கு அதிகாரிகளே பினாமிகள் பெயரில் விடுகின்றனர். இட உரிமையாளர்கள் நேரடியாக அரசிடம் வாடகைக்கு விட வேண்டும் என சொன்னால் ஏதாவது காரணத்தை சொல்லி, அதிகாரிகள் நிராகரித்து விடுகின்றனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும், தலைமைச் செயலாளருக்கும் இட உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், புகார் மனு அனுப்பி காத்திருக்கின்றனர். அரசியல்வாதிகள்தான் ஊழல் செய்கின்றனர் என்றால், அவர்களை மிஞ்சும் வகையில் அதிகாரிகளும் செயல்படுவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement