dinamalar telegram
Advertisement

மும்பைகாரருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 4 ஆக உயர்ந்தது. ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம் நகருக்கு 72 வயது நிரம்பிய முதியவர் திரும்பினார். கடந்த வியாழனன்று அவருக்கு கோவிட் உறுதியானது. இன்று அவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானதாக, குஜராத் சுகாதாரத் துறை தெரிவித்தது. மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த 33 வயது நபருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 24 ம்தேதி அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து துபாய், டில்லி வழியாக மும்பை திரும்பியுள்ளார். அவருடன் டில்லியில் இருந்து மும்பைக்கு பயணித்த 25 பேருக்கு டெஸ்ட் எடுத்தபோது நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஏற்கனவே, பெங்களூருவில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. முதல் பேஷண்ட் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 66 வயது நபர். அவர் பெங்களூருவில் இருந்து வெளிநாட்டுக்கு இரவோடு இரவாக சென்றுவிட்டார். 2வது நபர் பெங்களூரு டாக்டர். அவர் சிகிச்சையில் உள்ளார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement