dinamalar telegram
Advertisement

ஊரப்பாக்கத்தில் பரபரப்பு | Rain | Building damage

சென்னை புறநகர் பகுதியான ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகரில் 30 அடி அகலம் கொண்ட மழைநீர் கால்வாய் ஓடுகிறது. இது, நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கியது. தொடர் மழை காரணமாக கால்வாயிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஜெகதீஷ் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கால்வாயை ஒட்டி கட்டப்பட்டுள்ள 4 மாடி அபார்ட்மென்ட்டின் தரைத்தளத்தில் உள்ள வீட்டில் குணசேகரன் -ஸ்ரீவித்யா தம்பதியர் வசித்து வருகின்றனர்.  காலையில் வீட்டின் ஹாலில் திடீரென 8 அடி ஆழத்திற்கு மிகப்பெரிய பள்ளம் உண்டானது. நல்லவேளை, அப்போது, படுக்கையறையில் இருந்ததால் தம்பதியர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். திடீர் பள்ளத்தில் மழைவெள்ளம் ஓடுவதைக் கண்ட குணசேகரன் அதிர்ச்சியடைந்தார். கட்டடத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அதன் வழியாக உள்ளே வரும் மழைநீர், குணசேகரன் வீட்டு ஹால் வழியாக ஓடுவதைக் கண்ட அபார்ட்மென்ட்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை நினைத்து அங்கு வசிப்பவர்கள் கவலையடைந்துள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபார்ட்மென்ட் வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
அப்புசாமி
அப்புசாமி - . 01-டிச-2021 09:28 IST

எதுக்கும் கொஞ்சம் சாப்புட்டுப் பாருங்க. கோதாவரி தண்ணீர் கொண்டு வந்துட்டாங்கன்னு கேள்வி.

Reply
Indhuindian
Indhuindian - Chennai,இந்தியா . 01-டிச-2021 06:34 IST

தண்ணி வரலேன்னு இனிமே புகார் கொடுக்கக்கூடாது. இப்படியே எல்லாரும் நீர்நிலைகளில் வீடு கட்டிக்கொள்ள அரசு அனுமதித்தால் குடத்தை தூக்கிகிட்டு யாரும் ரோடுலே வந்து தண்ணி வரலேன்னு ஆர்பாட்டம் பண்ணமாட்டாங்க

Reply
Krishnan
Krishnan - Coimbatore ,இந்தியா . 01-டிச-2021 05:26 IST

நல்லா பாருங்க கோடிகள் உள்ள இருக்கும்

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement