dinamalar telegram
Advertisement

ஜெயலலிதா வீட்டு சாவி கேட்கும் தீபா | Jayalalithaa's Poes Garden house | Veda illam | Deepa

சென்னை போயஸ்கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அதிமுக அரசு கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என கோர்ட் தீர்ப்பளித்தது. மூன்று வாரத்தில் வீட்டு சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக்கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தீபா, தீபக் தனித்தனியாக மனு அளித்தனர். அரசிடம் ஆலோசித்த பின் வீட்டுச்சாவி ஒப்படைக்கப்படும் என கலெக்டர் விஜயராணி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement