dinamalar telegram
Advertisement

உதவுவது போல் நடித்து ரூ1 லட்சம் கொள்ளை

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் முருகேசன். 52 வயது கார் டிரைவர். மனைவியின் நகையை , பீர்கங்கரணையில் உள்ள சிண்டிகேட் வங்கியில் அடகு வைத்தார். ஒரு லட்ச ரூபாய் கிடைத்தது. இவரை நோட்டமிட்ட மூன்று பேர் பணத்தை திருட ஸ்கெட்ச் போட்டனர். முருகேசன் காரில் ஏறி, பின் சீட்டில் பணத்தை வைத்தார். மூன்று பேரில் ஒருவர் முருகேசனிடம் பேச்சு கொடுத்தார். கார் கீழ் பணம் கிடக்கிறது என பொய் சொல்லி, அவர் கவனத்தை திசை திருப்பினார். அந்த நேரத்தில் இன்னொருவர் கார் பின் பக்கமாக சென்று பணத்தை எடுத்தார். பைக்கில் காத்திருந்த இன்னொருவருடன் தப்பி சென்றார். பேச்சு கொடுத்தவரும் ஓடினார். ஏமாந்த முருகேசன் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மூவரை அடையாளம் கண்டனர். அவர்களை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement