Load Image
dinamalar telegram
Advertisement

கோழி வளர்ப்பு பெயரில் மோசடி பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை

ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் 2012ல் தொடங்கப்பட்ட ஹெல்தி பவுண்டரி பாம்ஸ் நிறுவனம், நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தை அறிவித்தது. 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஷெட் அமைத்து, 500 குஞ்சுகள் வழங்கப்படும். பராமரிப்புக்கு மாதம் 8,500 தருவோம். ஆண்டு முடிவில் ஊக்கத்தொகை தருவோம் என்றெல்லாம் அறிவித்தனர். அதை நம்பி 99 முதலீட்டாளர்கள் 1.55 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தனர். சொன்னடி செய்யாமல் நிறுவனம் ஏமாற்றியது. நிறுவன இயக்குனர்கள் கார்த்திகா, பிரபு உட்பட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. மோசடி செய்த கார்த்திகா, பிரபு ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கும் சேர்த்து 1.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 6 பேர் விடுவிக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement