dinamalar telegram
Advertisement

சிகரெட் தராத மளிகை கடைக்கு தீ வைத்த போதை ஆசாமி

திருப்பூர் நொச்சிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் அருகில் , செந்தில்குமார் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். சிகரெட் மட்டும் விற்க அருகே பெட்டிகடை வைத்துள்ளார். நேற்று இரவு டாஸ்மாக்கில் குடித்து விட்டு , சிகரெட் வாங்க ஒரு குடிமகன் சென்றார். 500 ரூபாய் நோட்டை நீட்டி , ஒரு சிகரெட் கேட்டார். செந்தில்குமார் சேன்ஜ் இல்லை என்றார். கடையை பூட்டி அவர் கிளம்பும்போது , 500 ரூபாய்க்கு எவ்வளவு சிகரெட் வருமோ அத்தனை கொடு என குடிமகன் கேட்டார். கடை மூடியதால் தர இயலாது என சொல்லிவிட்டு செந்தில் கிளம்பினார். அங்கேயே கொஞ்ச நேரம் அமர்ந்து இருந்த குடிமகன் , தன் பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்து வந்து மளிகை கடை ஷட்டரில் ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்த அப்பகுதிவாசிகள் தீயணைப்பு துறைக்கு தெரிவித்தனர். உடனே தீ அணைத்ததால் , பொருட்கள் சேதம் இல்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement