Load Image
dinamalar telegram
Advertisement

வைகை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை | Vaigai Dam | Flood Warning | Dinamalar

தேனி, ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. கட்டப்பட்ட 64 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே ஒரே ஆண்டில் 2 முறை நிரம்பியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி, ஜூனில் முழு கொள்ளளவு எட்டியது . இப்போது கன மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,125 கன அடியாக அதிகரித்தது. நீர் மட்டம் 66அடியை கடந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 969 கன அடி நீர் திறந்தால் , முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. வரலாற்றில் முதல் முறையாக வைகை அணை ஒரே ஆண்டில் 3வது முறை நிரம்ப உள்ளது. இதனால் பாசன வசதி பெறும் தேனி , திண்டுக்கல், மதுரை , சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement