dinamalar telegram
Advertisement

தறிகெட்டு ஓடிய எஸ்கார்ட் வாகனம் போதை போலீஸ் சஸ்பெண்ட் !

சென்னை, அரும்பாக்கத்தில் வெள்ளியன்று இரவு, விஐபிக்களின் பாதுகாப்புக்கு செல்லும் போலீஸ் எஸ்கார்ட் வாகனம், சைரனை அலறவிட்டபடி தாறுமாறாக ஓடியது. பொதுமக்களும், போக்குவரத்து போலீசாரும் திருவீதியம்மன் கோவில் அருகே காரை மடக்கினர். அதிலிருந்த சிலர் தப்பியோடிவிட்டனர். அரைநிர்வாண கோலத்தில், மதுபோதையில் இருந்த ஆயுதப்படை காவலர் சரவணன் மட்டும் பிடிபட்டார். நண்பர்களுடன் மது குடித்துவிட்டு, ஆயுதப்படை அலுவலகத்தில் இருந்த எஸ்கார்ட் வாகனத்தை எடுத்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்தததையடுத்து, சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் காரில் வந்தவர்கள் பற்றி விசாரணை நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement