dinamalar telegram
Advertisement

தேசியக்கொடி நிறங்களில் ஜொலிக்கும் பாரம்பரிய சின்னங்கள்

இந்தியாவில் 97 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் 18 அல்லது 19ம்தேதியில் 100 கோடி டோஸ் என்ற சாதனையை இந்தியா எட்டவுள்ளது. இதையொட்டியும் இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையிலும் நாடு முழுவதும் 100 பாரம்பரிய சின்னங்களில் தேசிய கொடியின் நிறங்களில் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரத சிற்பங்கள், கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில், வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோயில், புதுச்சேரி மூலநாதசுவாமி கோயில் செஞ்சி கோட்டை ஆகியவை தேசியக்கொடி நிறங்களில் ஜொலி ஜொலித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement