Load Image
dinamalar telegram
Advertisement

ராஜினாமா அறிவிப்பு சித்து வாபஸ்

அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் காங்கிரசுக்குள் கடந்த சில மாதங்களாக கோஷ்டி பூசல் நடந்து வருகிறது. நவ்ஜோத் சிங் சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். அவருடனும் சித்துவுக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து திடீரென ராஜினாமா செய்தார். ஆனால் சோனியாவே அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. கட்சித் தலைமை சமரசம் பேசிவந்தது. -நேற்று ராகுலை சித்து சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக சித்து கூறினார். எனக்குள்ள பிரச்னைகள் அனைத்தையும் ராகுலிடம் சொன்னேன்; அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதால் ராஜினாமாவை திரும்பப் பெற்றேன் என சித்து தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement