dinamalar telegram
Advertisement

அழகு நிலையம் நடத்தி வந்தவர்

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சண்முகா அடுக்குமாடி குடியிருப்பில் பிரதாப் என்பவரும், தேஜ்மென்டல் என்ற பெண்ணும் ஒன்றாக வசித்து வந்தனர். பிரதாப், சென்னையில் நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். தேஜ்மண்டல் சேலத்தில் 3 இடங்களில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்நிலையில், பிரதாப் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அலமாரியில் உள்ள சூட்கேசில் தேஜ்மண்டல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இறந்து நான்கைந்து நாளாகியிருக்கும் என்பதால் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. பிரதாப்பை போலீசார் தொடர்பு கொண்டபோது சென்னையில் இருப்பதாக கூறினார். பிரதாப்பும் தேஜ்மண்டலும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அழகு நிலையங்களில் விபசாரத்தில் ஈடுபட்டதாக தேஜ்மண்டல் மீது சேலம் போலீசார் கடந்த மாதம் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டுள்ளார். 4 நாளாக பிரதாப் எங்கே இருந்தார்-? தேஜ்மண்டல் எப்படி கொல்லப்பட்டார்? யாரெல்லாம் வீட்டுக்கு வந்து போனார்கள்? என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement