dinamalar telegram
Advertisement

தசரா ஊர்வலத்தில் புகுந்த கார் 4 பக்தர்கள் பலி

சத்தீஷ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் தசரா பண்டிகையையொட்டி துர்கை சிலை ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திடீரென அசுர வேகத்தில் வந்த ஒரு கார் பக்தர்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. பலர் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 20 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மேலும் 3 பேர் இறந்தனர். காரை மக்கள் விரட்டி பிடித்தனர். போதையில் இருந்த கார் டிரைவர் மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement