Load Image
dinamalar telegram
Advertisement

குட்டி யானையின் பாச போராட்டம்

முதுமலை தேசிய பூங்கா காட்டில் குடும்பத்துடன் வாக் போன குட்டி யானை பாதையோர பள்ளத்தில் தவறி விழுந்தது. மரங்கள் மறைத்ததால் பெரிய யானைகளால் குட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. முனகி கொண்டே இருந்த குட்டியை வனத்துறை ரோந்து டீம் பார்த்து காட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து காயத்துக்கு சிகிச்சை அளித்தது. குட்டி குணமானதும் தாயிடம் சேர்க்க அழைத்து சென்றது வன ஊழியர்கள் குழு. ஒரு வார தேடலுக்கு பின் தாயை கண்டுபிடித்து ஒப்படைத்தனர். அம்மாவை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் குட்டி யானை உற்சாகமாக குரல் எழுப்பியது. ஆனால், சில நாட்கள் பாசமாக பழகிய வனத்துறை ஊழியர்களை விட்டு பிரியவும் குட்டிக்கு மனசு வரவில்லை. ஒவ்வொரு ஊழியராக தும்பிக்கையால் தொட்டு கால்களை கட்டிப் பிடித்து நன்றி சொன்னது. குட்டியுடன் யானை கூட்டம் கிளம்பியதும் வன ஊழியர் குழுவும் கண்களை துடைத்தபடி திரும்பியது. இந்த நிகழ்ச்சியின் சில பகுதிகள் விடியோ காட்சியாக சமூக ஊடகத்தில் பரவி பார்த்தவர் மனதை கொள்ளை கொண்டன. ”காடுகளையும் விலங்குகளையும் காப்பாற்ற தமிழக வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் காட்டும் அக்கறை எங்களை பிரமிக்க வைக்கிறது” என்று பல மாநில மக்களும் பாராட்டுகின்றனர். ”வெவ்வேறு மாநில அதிகாரிகள் தமிழக வனத்துறையில் வேலை செய்தாலும் அத்தனை பேரும் ஒரே மாதிரி சிந்திப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என நெகிழ்கிறார் ஒரு முன்னாள் அரசு அதிகாரி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement