Load Image
dinamalar telegram
Advertisement

பட்டாசுக்கு தடை 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தீபாவளி பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. டில்லி, ராஜஸ்தான், ஒடிசா, அரியானா மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. அம்மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். காற்று மாசு காரணமாக உங்கள் மாநிலத்தில் பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் தடை விதித்துள்ளீர்கள்; அதை புரிந்து கொள்கிறேன். ஆனாலும் கோவிட் நோய் தொற்றால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலை நம்பி 8 லட்சம் பேர் உள்ளனர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்டாசுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; சுப்ரீம் கோர்ட் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement