dinamalar telegram
Advertisement

அனைத்து சின்னத்திலும் முத்திரையிட்ட வாக்காளர்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன. வெள்ளையாம்பட்டு ஊராட்சியில் 16வது வார்டில், பதிவான வாக்கு எண்ணும்போது, ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ஓட்டளித்த வாக்காளர் ஒருவர் வாக்குச்சீட்டில் இருந்த ஐந்து சின்னங்களில் 4 சின்னங்களுக்கு ஓட்டு போட்டுள்ளார். இந்த வாக்குச்சீட்டு முகவர்களால் சரிபார்க்கப்பட்டு செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது. பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் ஓட்டளித்த அந்த வாக்காளரின் ஓட்டு சீட்டு வைரலாகியுள்ளது. இது நகைப்பை ஏற்படுத்தினாலும். இன்னும் பலருக்கு ஓட்டளிப்பதற்கான போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை காட்டுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement