dinamalar telegram
Advertisement

பணம் இல்லாத வீட்டை எதுக்கு பூட்டி வைக்கணும் ? திருடன் கடிதம்

மத்திய பிரதேசம் , தேவஸ் மாவட்டத்தில் உள்ள சப் கலெக்டர் வீடு பல நாள் பூட்டி இருந்ததை திருடன் நோட்டமிட்டான். இரவு ஆள் நடமாட்டம் இல்லாத போது பூட்டை உடைத்து நுழைந்து பிரோ லாக்கரை திறந்தான். பெரியதாக தேறும் என நினைத்த திருடனுக்கு 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது. அங்கிருந்த ஒரு லெட்டர் பேடில் ”பணம், நகை இல்லை என்றால் அந்த வீட்டை எதுக்கு பூட்டி வைக்கணும் கலெக்டரே ” என எழுதி வைத்து சென்றுள்ளார். இரண்டு வாரங்களுக்கு பின் வீடு திரும்பிய கலெக்டர், திருட்டு நடந்ததை அறிந்தார். போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement