dinamalar telegram
Advertisement

குன்றத்தூரில் ஊழியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டுப்பெட்டிகள் மாங்காடு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்க இருந்தது. ஓட்டும் எண்ணும் பணிக்கு நியமிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலை 7 மணிக்கே மையத்துக்கு வந்து விட்டனர். அவர்கள் கொண்டு வந்த பேக்குகளை மையத்துக்குள் தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. உள்ளே சென்ற அவர்களுக்கு உணவும் வழங்கப்படவில்லை. பசியோடு எப்படி ஓட்டு எண்ண முடியும் என கேட்டு, அதிகாரிகளுடன் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வாக்கு எண்ணும் பணிக்கு வந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குன்றத்தூர் ஒன்றிய ஓட்டுகள் எண்ணப்படவில்லை. போராடும் ஊழியர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement