dinamalar telegram
Advertisement

அரசு நிலம் பட்டா மாற்றிய வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்

தேனி மாவட்டம் பெரியகுளம் வடவீரநாயக்கன்பட்டியில், அரசுக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் செய்ததாக புகார் வந்தது. விசாரணை நடத்த கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். கடந்த 2017-19 வரை இந்த முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. நில அளவையர் சக்திவேல் மனைவி பெயரில் பட்டா மாற்றம் செய்ததால் கடந்த 2 ஆம் தேதி சஸ்பெண்ட் ஆனார். அதன் பிறகு விசாரணை சூடு பிடித்தது. முறைகேடு செய்த , பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் , போடி வட்டாட்சியர் ரத்தினமாலா , துணை வட்டாட்சியர் மோகன்ராம் , ஆண்டிப்பட்டி துணை வட்டாட்சியர் சஞ்சீவ் காந்தி சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement