dinamalar telegram
Advertisement

தமிழகம், ஆந்திராவில் கோபுர கலசங்களை திருடிய கும்பல் கைது

ஆந்திராவின் காலே பள்ளி கிராஸ் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே வந்த காரை நிறுத்த முயன்றபோது நிற்காமல் வேகமாக சென்றது. விரட்டி பிடித்த போலீசார், கரில் இருந்த 4 பேரிடம் விசாரித்தனர். தமிழகம் ஆந்திராவில் கோயில் கோபுர கலசங்களை திருடி இருடியம் இருப்பதாக கூறி விற்று வருவது தெரிந்தது. திருத்தனி ராஜ்குமார், ராணிப்பேட்டை பிரகாஷ், அரிகிலபாடி பாண்டியன், சித்தூர்  அரசு பள்ளி ஆசிரியர் சக்கரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர். 50 லட்சம் ரூபாய்க்கு புதுச்சேரியில் விற்ற 2 பஞ்சலோக கலசங்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement