dinamalar telegram
Advertisement

கண்டக்டர் மீது கல் வீச்சு மாணவர்கள் அடாவடி

சென்னை பெரம்பூர் செல்லும் பஸ் ராஜா அண்ணாமலை சாலை பஸ் ஸ்டாப்பில் நின்ற போது, 9 பள்ளி மாணவர்கள் ஏறினர். புட்போர்டில் பயணம் செய்தனர். உள்ளே போக சொன்னார் கண்டக்டர் சுரேஷ். அப்போதும் தொங்கியபடி இருந்தனர். பஸ்சை நிறுத்தி அவர்களை இறங்க சொன்னார்.அப்போது 2 மாணவர்கள் கண்டக்டர் மீது கல் வீசிவிட்டு தப்பினர். லேசான காயங்களுடன் தப்பினார். இது பற்றி தெரிந்ததும் , தாக்கப்பட்ட கண்டக்டருக்கு நியாயம் கேட்டு , அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது. கண்டக்டர்கள் , டிரைவர்கள் நடு ரோட்டில் போராட்டம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின் கலைந்து சென்றனர். இது குறித்து தனியார் பள்ளி மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பிய இருவரை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement