dinamalar telegram
Advertisement

சுத்தியல் கண்ணாடியில் 1.5 கிலோ தங்கம் கடத்தல் பலே கில்லாடிகள் கைது

துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சென்னையை சோ்ந்த ஆண் பயணி சுத்தியலை வைத்திருந்தார். அதுபற்றி அதிகாரிகள் கேட்டபோது, நான் துபாயில் கார்பெண்டராக வேலை பாா்த்தேன். அப்போது பயன்படுத்திய சுத்தியல். அது ராசியான சுத்தியல் என்பதால் கம்பெனியில் கேட்டு எடுத்து வந்தேன் என்றார். அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுத்தியலை ஆராய்ந்தபோது, அதன் கைப்பிடியில் 341 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு 14.25 லட்சம் ரூபாய். இதையடுத்து அந்த பயணியை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement