Load Image
dinamalar telegram
Advertisement

முஸ்லிம் பெண்ணுக்கு லிப்ட் கொடுத்த இளைஞருக்கு அடி பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்

பெங்களூருவில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றும் ஒரு முஸ்லிம் பெண், சக ஊழியருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். டெய்ரி சதுக்கம் பகுதியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் பைக்கை மறித்தனர். வண்டியை ஓட்டியவர் இந்து என்பது உறுதியானதும் அந்த பெண்ணை முஸ்லிம் இளைஞர்கள் திட்ட தொடங்கினர். ஒரு இந்துவுடன் பைக்கில் போகிறாயே.... இது உனக்கு அசிங்கமா இல்லையா? என கோபத்துடன் கேட்டனர். பிறகு அந்தப் பெண்ணை மிரட்டி கணவரின் நம்பரை வாங்கி போன் போட்டனர். இன்னொருத்தன்கூட உன் மனைவியை பைக்ல அனுப்புறியே வெட்கமா இல்லியா? உன்ன மாதிரி ஆட்களாலதான் நம்ம மதத்துக்கு களங்கம் வருது என பெண்ணின் கணவரை போனில் சரமாரியாக திட்டினர். பிறகு, பைக் ஓட்டி வந்த இளைஞரை அடித்து உதைத்தனர். இன்னொரு தடவை பர்தா போட்ட பொண்ணை பைக்குல கூட்டிட்டு போறத நாங்க பார்த்தா உன்ன தொலைத்து விடுவோம் என மிரட்டினர். அந்த பெண்ணை பைக்கை விட்டு இறக்கி ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து பெங்களூரு போலீசார் துரித கதியில் செயல்பட்டனர். பைக்கை மறித்து தாக்கிய 2 வாலிபர்களை கைது செய்தனர். 12 மணி நேரத்துக்குள் வாலிபர்களை கைது செய்த போலீசாரை முதல்வர் பசவராஜ் பொம்மை பாராட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement