Load Image
dinamalar telegram
Advertisement

ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும் ஐகோர்ட் தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு 2017 ல் கூடியது. அப்போது பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து விட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டனர். புதிய நியமனங்களை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது. இதை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். புதிய பதவிகளை ஏற்படுத்தியது அதிமுக விதிகளுக்கு முரணானது; புதிய பதவிகளை ஏற்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும்; இதில் எந்த சட்ட விரோதமும் இல்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement